News August 20, 2024
கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து

தங்களை காப்பாற்றிக்கொள்ள பெண்கள் பாலியல் ஆசையை அடக்கிக்கொள்ள வேண்டும் என்ற கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மைனர் பெண் ஒருவரை இளைஞர் ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், அப்பெண்ணுக்கும், இளைஞனுக்கும் காதல் உறவு இருந்ததால், வன்கொடுமை ஆகாது என கூறி, இளைஞனை ஐகோர்ட் விடுவித்தது. இத்தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம், ஐகோர்ட்டிற்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கியது.
Similar News
News March 30, 2026
ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவோம்: டிரம்ப்

ஈரானின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், ஈரானின் ஆயில் ஏற்றுமதி மையமாக உள்ள கர்க் தீவை அமெரிக்கா கைப்பற்றக்கூடும் என்று டிரம்ப் தெரிவித்தார். மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரித்து வருகிறது.
News March 30, 2026
எனது வீழ்ச்சிக்கு இதுவே காரணம்: நடிகர் பரத்

காதல், வெயில், எம்.மகன் போன்ற ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பரத்தின் கரியர் இன்று சொல்லும்படி இல்லை. இதற்கான காரணம் குறித்து அவர் மனம் திறந்துள்ளார். என்னுடைய கெட்ட நேரம், 555 படத்திற்கு சரியான புரோமோஷன் இல்லாமல், ‘தலைவா’ பட வெளியீட்டு பிரச்னைக்கு நடுவே வெளியானது, நேபாளி படமும் சம்திங் சம்திங்குடன் வெளியாகி தோல்வியை தழுவ, அதன் பிறகு நடித்த படங்களுக்கு புரோமோஷன் இல்லை என வேதனைப்பட்டுள்ளார்.
News March 30, 2026
கார்களின் விலை ₹68,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

கார்களுக்கான மார்ச் மாத சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டாடா, ஸ்கோடா, ஹோண்டா, ஹூண்டாய், மாருதி உள்ளிட்ட நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ளன. குறைந்தபட்சம் ₹40,000 முதல் அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை சலுகைகள் உள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.


