News August 20, 2024
கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து

தங்களை காப்பாற்றிக்கொள்ள பெண்கள் பாலியல் ஆசையை அடக்கிக்கொள்ள வேண்டும் என்ற கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மைனர் பெண் ஒருவரை இளைஞர் ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், அப்பெண்ணுக்கும், இளைஞனுக்கும் காதல் உறவு இருந்ததால், வன்கொடுமை ஆகாது என கூறி, இளைஞனை ஐகோர்ட் விடுவித்தது. இத்தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம், ஐகோர்ட்டிற்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கியது.
Similar News
News January 19, 2026
அரசியலை விட்டு விலக முடிவா? ரோஜா விளக்கம்

பிரபல நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா அரசியலில் இருந்து விலகுவதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு பதிலளித்துள்ள அவர், தான் தற்போது சினிமா, டி.வி. நிகழ்ச்சிகளில் அதிகமாக வருவதால், அரசியலை விட்டு விலகி விடுவேன் என்று நினைக்கிறார்கள். நான் ஒருபோதும் பயந்து ஓடவோ, விலகவோ மாட்டேன். நான் ஒரு பெண் என்பதால் விமர்சனம் செய்கிறார்கள் என்று கூறினார்.
News January 19, 2026
விஜய்யுடன் கூட்டணியை விரும்பாத காங்., தலைமை!

தவெக உடன் கூட்டணி இல்லை என்பதை காங்கிரஸ் தலைமை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து பயணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் – தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் திமுக கூட்டணியில் தொடர விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
News January 19, 2026
நிபா வைரஸ்: தமிழக அரசு எச்சரிக்கை

மேற்கு வங்கத்தில் பரவிவரும் நிபா வைரஸ் காரணமாக தமிழகத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, மூச்சுத்திணறல், மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும் என்றும் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


