News August 20, 2024

ஆகஸ்ட் 20: வரலாற்றில் இன்று

image

▶1948 – இலங்கை குடியுரிமை சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 7 லட்சத்திற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். ▶1995 – உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் 358 பேர் உயிரிழந்தனர். ▶2006 – நமது ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் சி. சிவமகராஜா, யாழ்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Similar News

News August 15, 2025

7 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,520 குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 7-வது நாளாக குறைந்துள்ளது. கடந்த 8-ம் தேதி ₹75,760-க்கு விற்பனையான 22 கேரட் தங்கம், அதன் பிறகு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இன்று 1 கிராம் ₹9,280-க்கும், சவரன் ₹74,240-க்கும் விற்பனையாகிறது. முதல் வாரத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், 2-வது வாரத்தில் சற்று சரிந்துள்ளது நடுத்தர மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

News August 15, 2025

சுதர்சன சக்ரா மிஷனில் இந்தியா: PM மோடி

image

கிருஷ்ணரின் சுதர்சன சக்கரத்திலிருந்து உத்வேகம் பெற்று நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை விரிவுபடுத்துதல் & நவீனமயமாக்கலை நோக்கி நாடு நகரும் என PM மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனது சுதந்திர தின உரையில், 2035-க்குள் உள்நாட்டு கண்டுபிடிப்புகள், தற்சார்பு பொருளாதாரம், வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு ஆகியவற்றை நோக்கி சுதர்சன சக்ரா மிஷனில் நாடு இயங்க இளைஞர்கள் உறுதிபூணுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 15, 2025

மலைபோல் குவிந்த வாழ்த்துகளுக்கு ரஜினி நன்றி

image

நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால திரைப்பயணத்தை பறைசாற்றி, திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த CM ஸ்டாலின், EPS, கமல், மோகன்லால், இளையராஜா உள்ளிட்ட அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் அனைவருக்கும் 79-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!