News August 20, 2024
ஆகஸ்ட் 20: வரலாற்றில் இன்று

▶1948 – இலங்கை குடியுரிமை சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 7 லட்சத்திற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். ▶1995 – உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் 358 பேர் உயிரிழந்தனர். ▶2006 – நமது ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் சி. சிவமகராஜா, யாழ்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Similar News
News January 18, 2026
விக்ரம் சாராபாய் பொன்மொழிகள்

*முன்னேற விரும்பினால், புதிய பாதைகளைத் தேடத் தயங்கக்கூடாது. *இளைஞர்களின் கனவுகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குகின்றன. *இரைச்சலுக்கு மத்தியில் இசையை கேட்கத் தெரிந்தவனால் மகத்தான சாதனைகளை நிகழ்த்த முடியும். *விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானவை. *ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் அறிவியல் மனப்பாங்கில் தான் அடிப்படையாக உள்ளது.
News January 18, 2026
சவுதி அரேபியாவில் அரிய சிறுத்தை மம்மிகள்

வடக்கு சவுதி அரேபியாவில் உள்ள குகைகளில் அரிய சிறுத்தை எச்சங்களை (மம்மிகள்) கண்டுபிடித்துள்ளனர். அவை 130 – 1800 ஆண்டுகள் பழமையானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அரார் நகருக்கு அருகே 7 சிறுத்தை மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றுடன் 54 சிறுத்தை எலும்புகளும் இருந்தன. பாலைவனங்கள், பனிப்பாறைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் மம்மிகேஷன் இயற்கையாகவே நிகழ்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
News January 18, 2026
RCB ஆல்-ரவுண்டர் U19 WC-ல் அசத்தல்

U19 WC-ல் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த விஹான் மல்ஹோத்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இளம் ஆல்-ரவுண்டரான விஹான், IPL 2026 ஏலத்தில் RCB அணியால் ₹30 லட்சத்திற்கு வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


