News August 19, 2024

2ஆவது திருமணம் செய்த சுபிக்‌ஷா

image

‘ரஜினி’ தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமானவர் சுபிக்‌ஷா. தொடர்ந்து பல தொடர்களில் நடித்து வரும் இவர், 2020ஆம் ஆண்டு கோரியோஃகிராபர் மானஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவரை விவாகரத்து செய்ததாக தகவல் பரவியது. இந்நிலையில், அவினாஷ் என்பவருடன் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

Similar News

News March 16, 2026

தவெகவுக்கு ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை

image

ரஜினி குறித்த ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்துக்கு மன வலிமை இல்லை என்று பேசியதற்காக ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் கூறினர். தவறும் பட்சத்தில் 234 தொகுதிகளிலும் உள்ள ரஜினி ரசிகர்களும் தவெகவிற்கு எதிராக பூத் அளவில் போர்க்கொடி தூக்குவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News March 16, 2026

ஆஸ்கர் விருது வென்ற இந்திய வம்சாவளி இயக்குநர்!

image

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரே சிங் தற்போது உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனது மனைவி Natalie Musteata உடன் இணைந்து இவர் இயக்கிய ‘Two People Exchanging Saliva’ என்ற பிரெஞ்சு குறும்படம் Best Live Action Short Film பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. பிரான்ஸின் போர்டோ நகரில் பிறந்த இவர், The Appointment (2019), Plan large (2016) போன்ற குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

News March 16, 2026

விஜய் கட்சியில் இணைந்தார்.. டிடிவி தினகரன் அதிர்ச்சி

image

தேர்தலையொட்டி மாற்றுக் கட்சி நிர்வாகிகளை இழுக்கும் வேலையில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், அமமுகவின் திருவள்ளூர் மாவட்ட அவைத் தலைவர் சு.சம்பந்தம் தவெகவில் இணைந்துள்ளார். புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளார். இது தேர்தல் நேரத்தில் TTV தினகரன் தரப்புக்கு பின்னடைவாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!