News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News October 27, 2025
Sports Roundup: ரஞ்சியில் பிரித்வி ஷா இரட்டை சதம்

*காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள பேட்மிண்டன் தொடர்களில் இருந்து பி.வி.சிந்து விலகல். *ரஞ்சி கோப்பையில் 3-வது அதிக வேக இரட்டை சதத்தை பிரித்வி ஷா பதிவு செய்துள்ளார். *முதல் ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என அறிவிப்பு. *ஆசிய யூத் கேம்ஸ், மகளிர் 3*3 கூடைப்பந்து காலிறுதியில் இந்தியா 10-15 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானிடம் தோல்வி.
News October 27, 2025
இருளில் ஒளிரும் 10 உயிரினங்கள்

ஆழ்கடல் உயிரினங்கள் முதல் காட்டுப் பூச்சிகள் வரை, சில உயிரினங்கள் இயற்கையாகவே இருட்டில் ஒளிர்கின்றன. இதனை பயோலுமினசென்ட் உயிரினங்கள் என்று அழைக்கின்றனர். இந்த ஒளிரும் அதிசயங்கள் மாயாஜால காட்சியாக தோன்றுகின்றன. என்னென்ன உயிரினங்கள் இரவில் ஒளிரும் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்தது எது? கமெண்ட் பண்ணுங்க.
News October 27, 2025
வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தை நிலவரம்

சர்வதேச நிலையற்ற தன்மை, அமெரிக்கா – சீனா வர்த்தக மோதல் உள்ளிட்ட காரணிகளால், கடந்த வார இறுதியில் இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. ஆனால், வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன. அதன்படி, மும்பை குறியீட்டு எண் Sensex, 566.96 புள்ளிகள் உயர்ந்து 84,778 புள்ளிகளுடனும், தேசிய குறியீட்டு எண் Nifty50, 170.90 புள்ளிகள் உயர்ந்து 25.966- புள்ளிகளுடனும் நிறைவடைந்துள்ளன.


