News August 8, 2024

தாமிரபரணி கரையில் மீன் சின்ன கல்வெட்டு

image

தாமிரபரணி கரையில் மீன் சின்னத்துடன் கல்வெட்டு இன்று (ஆக.8) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாளை தருவை அருகே தாமிரபரணியில் பச்சையாறு இணையும் பகுதியில் கல் மண்டபம், அதில் மீன் சின்னங்களுடன் கல்வெட்டு உள்ளது. இதை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் தலைமையில் தொல்லியல் ஆர்வலர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து இந்த கல்வெட்டு குறித்த ஆய்வு நடக்கிறது.

Similar News

News October 30, 2025

நெல்லை: சினிமாவை மிஞ்சும் நூதன கொள்ளை

image

பேட்டை MGP பள்ளிவாசல் தெருவை சேர்ந்த காதர் பீவி என்பவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் பெண் ஒருவர் மகளிர் உதவித்தொகைக்கு கணக்கெடுப்பு நடப்பதாக கூறி விஏஓ அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கே கழுத்தில் உள்ள செயினை கழற்றி தன்னிடம் தந்துவிட்டு விசாரணைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி காதர் பீவி செய்துள்ளார். பின்னர் அந்த பெண் செயினுடன் தலைமறைவாகி விட்டார். புகாரின் பேரில் பேட்டை போலீசார் விசாரணை.

News October 30, 2025

நெல்லை: G Pay / PhonePe பயன்படுத்துகிறீர்களா?

image

நெல்லை மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க

News October 30, 2025

நெல்லை: லஞ்சம் பெற்ற 2 அதிகாரிகளுக்கு சிறை

image

திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த கோமதிநாயகம் 2009ல் வீடு கட்டி மின் இணைப்பிற்கு விண்ணப்பித்தார். உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், வணிக உதவியாளர் உதயகுமார் ரூ.7500 லஞ்சம் கேட்டனர். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர். வழக்கு திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சுப்பையா இருவருக்கும் 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தார்.

error: Content is protected !!