News August 8, 2024
பணவீக்கம் 5.1%ஆக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி

பணவீக்கம் ஜூன் மாதம் 5.1%ஆக அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பணவீக்கம் 4.8% என்ற நிலையில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 2024-25 நிதியாண்டுக்கான நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.2%ஆக இருக்குமெனவும், 2025-26ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.2% ஆக தொடருமென்று கணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News August 20, 2025
பேச்சுவார்த்தைக்கு முன்வந்த ரஷ்யா

உக்ரைனுடன் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்யா தெரிவித்துள்ளது. அரசியல், ராணுவம், மனிதநேய நடவடிக்கைகள் குறித்து பேச தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. டிரம்ப் – புடின், டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்புகளுக்கு பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யா – உக்ரைன் 3 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
News August 20, 2025
பாஜக அணியில் பாமக, தேமுதிக.. திடீர் திருப்பம்

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான NDA வேட்பாளர் CP ராதாகிருஷ்ணனுக்கு ராமதாஸ், பிரேமலதா ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. CP ராதாகிருஷ்ணன் நல்ல தேர்வு என ராமதாஸ் கூறியுள்ள நிலையில், தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதியாக வர அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார். 2026 தேர்தலில் அவர்கள் NDA அணியில் இணைவதற்கான அச்சாரம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News August 20, 2025
1999-ல் மதவாதம் தெரியாதா? கனிமொழிக்கு EPS கேள்வி

பாஜகவுடன் கூட்டணி வைத்து CP ராதாகிருஷ்ணனை திமுக MP-யாக வெற்றி பெற செய்தபோது மதவாதம் குறித்து தெரியாதா என கனிமொழிக்கு EPS கேள்வி எழுப்பியுள்ளார். குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளை அடிக்கடி மாற்றும் கட்சி திமுக என சாடிய அவர், RSS காரர் என்பதால் ஆதரிக்க மாட்டோம் என்பது நாடகம் என்றார். மேலும், தற்போதைய ஆட்சியில், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்ந்துள்ளது என்றார். உங்கள் கருத்து?