News August 7, 2024
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பு ஏற்பு

நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய கதிரவன் தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தேனி மாவட்டத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த மகாகிருஷ்ணன் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று (ஆக.7) முறைப்படி திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
Similar News
News July 9, 2025
ராதாபுரத்தில் 15 குளங்களுக்கும் தண்ணீர் வழங்க வேண்டும்

தமிழக சபாநாயகர் அப்பாவு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், ராதாபுரம் கால்வாய் மூலம் விடுபட்ட 15 குளங்களுக்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த 15 குளங்களும் நேரடி பாசனத்திலும் சேர்க்கப்படவில்லை. குளத்துப் பாசனத்திலும் சேர்க்கப்படாததால், அப்பகுதிகள் தொடர்ந்து வறட்சியாகவே உள்ளன. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
இஎஸ்ஐ பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

இஎஸ்ஐ நெல்லை துணை மண்டல அலுவலக துணை இயக்குநர் விவேக் வெளியிட்ட செய்திக்குறிப்பு, இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடந்த 196-வது கூட்டத்தில், தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐசி) உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பதிவு மேம்பாட்டுத் திட்டத்தை அங்கீகரித்துள்ளது. இத்திட்டம் 2025 ஜூலை.1 முதல் டிசம்பர்.31 வரை அமலில் இருக்கும். உரிமையாளர்கள் இஎஸ்ஐசி இணையதளம் விண்ணப்பிக்கலாம் என்றார்.
News July 9, 2025
B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் இங்கே<