News August 7, 2024
ஒரே இரவில் நடந்தது என்ன?

நேற்று ஒரே நாளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு செல்லும் முன்பே வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். 3 முறை ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்ட அனுபவசாலி, 52 kg பிரிவில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டபோது, எடையை குறைத்து இலக்கை நோக்கி நகர்ந்தவர். ஆனால், ஒரே இரவில் 100 கிராம் எடை அதிகம் எனக்கூறி தகுதி நீக்கம் செய்ததன், பின்னணியை புரிந்து கொள்ளவே முடியவில்லை?.
Similar News
News December 9, 2025
கோல்டன் குளோப்ஸ் ஃபீவர் ஸ்டார்ட் ஆனது!

2026 கோல்டன் குளோப்ஸ் பரிந்துரை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த இயக்குநர், நடிகர் என 9 பிரிவுகளில் டிகாப்ரியோவின் ‘One Battle After Another’ பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து நார்வே படமான ‘Sentimental Value’ 8, ஹாலிவுட் படமான ‘Sinners’ 7 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11-ம் தேதி, ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் இந்த சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
News December 9, 2025
கோவா தீ விபத்து: இண்டர்போல் உதவியை நாடும் போலீஸ்

கோவா <<18500834>>இரவு விடுதி தீ விபத்தில்<<>> 25 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து நடந்த சில மணி நேரத்தில் விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்து தப்பியோடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தப்பியோடிய கௌரவ் மற்றும் சவுரப்பை பிடிக்க, இண்டர்போல் உதவியை போலீசார் நாடியுள்ளனர். இதற்கிடையே, இவர்களுக்கு சொந்தமான இன்னொரு விடுதி ஒன்று, அரசு நிலத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
News December 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 544 ▶குறள்: குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. ▶பொருள்: குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.


