News August 6, 2024
ஆகஸ்ட் இறுதிக்குள் மாணவர்களுக்கு சீருடை

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 4 செட் புதிய சீருடைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகளுக்கு முழுமையாக இன்னும் சீருடை வழங்கப்படவில்லை. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், தனித்தனியாக அளவெடுத்து தைப்பதால், அவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
Similar News
News August 11, 2025
BREAKING: நவம்பர் 1, 2-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதியை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் அதற்காக இன்று முதல் செப்டம்பர் 8 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த விவரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
News August 11, 2025
உண்மையான நட்பு எங்கே?

நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் நம் `நண்பர்கள்’ ஆகிவிடமாட்டார்கள். `நண்பேண்டா’ என டயலாக் பேசினாலும், உண்மையான நட்புணர்வு கொண்ட நண்பர்கள் இக்காலத்தில் குறைவே. நுகர்வு கலாசாரமும், அதற்கான பணநாட்டமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மனிதர்களை தங்களுக்குள் நெருங்கிப் பழகவிடாமல் தடுக்கின்றன. அப்படி பழகினாலும் அது மேம்போக்காக, பொழுதை போக்கும் நட்பாகவே உள்ளது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? உங்க best friend யார்?
News August 11, 2025
மகளிர் உரிமைத் தொகை.. இதனை மறக்க வேண்டாம்!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு செயல்படாத பேங்க் அக்கவுண்டை தவறுதலாக கொடுத்துவிட்டால் கவலை வேண்டாம். முதலில் பேங்குக்கு சென்று அந்த அக்கவுண்டை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில், புதிய அக்கவுண்ட் தொடங்கி அதற்கான தகவலை தாலுகா ஆபிஸில் சமர்பிக்க வேண்டும். அதன்பின், மகளிர் உரிமைத் தொகை புதிய அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும். SHARE IT.