News August 6, 2024

ஆகஸ்ட் இறுதிக்குள் மாணவர்களுக்கு சீருடை

image

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 4 செட் புதிய சீருடைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகளுக்கு முழுமையாக இன்னும் சீருடை வழங்கப்படவில்லை. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், தனித்தனியாக அளவெடுத்து தைப்பதால், அவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Similar News

News January 24, 2026

நெல்லை: 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா? CHECK IT

image

நெல்லை மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.<>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க.
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!

News January 24, 2026

பள்ளிகள் கட்டண திருத்த மசோதா நிறைவேற்றம்

image

தமிழக பேரவையில் இன்று 5 முக்கிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தமிழ்நாடு நீர்வளங்கள், தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்தம், வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்தல், பிச்சை எடுப்பதை தடுத்தல், பள்ளிகள் கட்டண திருத்தம் ஆகிய 5 மசோதாக்களை துறை சார்ந்த அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில் மேற்கண்ட மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பட்டுள்ளன.

News January 24, 2026

பாகிஸ்தான் பனிச்சரிவில் ஒரு குடும்பமே அழிந்தது

image

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைபர் பக்துன்வா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பச்சா கான், அவரது மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் & 2 மருமகள்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சுவாச பிரச்னைகளால் அவதிப்படுவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

error: Content is protected !!