News August 6, 2024
இரவோடு இரவாக 22 பேர் கைது

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கைக்கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த அவர்கள், விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இலங்கை காங்கேசன் துறைமுகம் அழைத்துச்செல்லப்பட்டனர். தொடர் கைது சம்பவங்கள், மீனவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களும், அவர்களது படகுகளும் இலங்கை வசமுள்ளன.
Similar News
News January 22, 2026
அரிசி ரேஷன் கார்டுக்கு மாற வேண்டுமா?

பொங்கல் பரிசாக தமிழக அரசு ₹3,000 வழங்கிய நிலையில், அதை அரிசி அட்டை இல்லாதவர்கள் பெறமுடியாமல் போனது. இதுதொடர்பாக, சட்டமன்றத்தில் எழுப்பப்பட கேள்விக்கு அமைச்சர் சக்ரபாணி முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். தகுதியுள்ளவர்கள் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், துறை சார்ந்த அதிகாரிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
News January 22, 2026
வைத்திலிங்கம் அதிர்ச்சி.. அதிமுகவில் மீண்டும் சேர்ந்தனர்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று திமுகவில் இணைந்தார். இதனால் அதிருப்தியடைந்த அவரின் தீவிர விசுவாசிகளாகவும், OPS ஆதரவாளர்களாகவும் இருந்த தஞ்சை சண்முகப்பிரபு, சுவாமிநாதன், செல்லதுரை, ஜெகதீசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இன்று EPS-ஐ நேரில் சந்தித்து மீண்டும் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். விரைவில் பிரமாண்ட இணைப்பு விழா நடத்த திட்டமிட்ட வைத்திலிங்கத்திற்கு, இது அதிர்ச்சி அளித்துள்ளது.
News January 22, 2026
உடனே செய்யுங்க: அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளதாக <<18921270>>சுகாதாரத்துறை <<>>எச்சரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பு பதிவான பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், எலிசா பரிசோதனைகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்களை கையிருப்பில் வைத்திருக்கவும், ஹாஸ்பிடல்களில் பிரத்யேக வார்டுகளை அமைக்கவும் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


