News August 5, 2024
வயநாடு நிலச்சரிவு பலி 400ஆக உயர்ந்தது

வயநாடு நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில், சூரல்மலை, முண்டக்கை உள்பட 3 கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 400 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. உதவிக்கு 04936 204151, 95268 04154, 80784 09770 என்ற எண்களில் அழைக்கவும்.
Similar News
News January 21, 2026
₹10 லட்சம் கோடி இழப்பு

ஐரோப்பா மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளின் சரிவு இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் வர்த்தகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சந்தை மூலதனம் சுமார் ₹10 லட்சம் கோடி சரிந்தது. முதலீட்டாளர்களுக்கு இது பெரும் இழப்பு.
News January 21, 2026
புவிசார் குறியீடு: 2-வது இடத்தில் தமிழ்நாடு

தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் இதுவரை 74 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. புவிசார் குறியீடு பெற்றதில், இந்தியாவில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. 74 பொருட்களில் கைவினைப் பிரிவில் – 38, உணவுப் பிரிவில் – 9, உற்பத்திப் பிரிவில் – 3, விவசாயப் பிரிவில் – 24 என கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் 77 பொருள்களுடன் முதலிடத்தில் உள்ளது.
News January 21, 2026
மோடி வருகிறார்.. மாற்றம் ஏற்படும்: தமிழிசை

2026 தேர்தல் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 23-ம் தேதி பிரதமர் மோடியின் வருகை, தமிழக அரசியலில் ஏற்பட உள்ள மிகப்பெரிய மாற்றத்திற்கு அடித்தளமாக அமையும் என்று கூறினார். PM மோடி, மதுராந்தகத்தில் நடைபெறும் NDA கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் வருகிறார்.


