News August 5, 2024

மாணவர்கள் உயிரோடு விளையாடுவதா?

image

டெல்லியில் IAS பயிற்சி மையத்தில் வெள்ள நீரில் சிக்கி, 3 மாணவர்கள் பலியானது குறித்து விளக்கமளிக்க, மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சம்பவத்தை இன்று, தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் சூரியகண்ட், உஜ்ஜல் பூயன், மாணவர்களின் உயிரோடு, பயிற்சி மையங்கள் விளையாடுவதாக கண்டித்தனர். உரிய பாதுகாப்பு வசதிகளின்றி, பயிற்சி மையங்கள் செயல்படக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

Similar News

News February 6, 2026

ஊடுருவல்காரர்களுக்கு பாதுகாப்பு.. PM மோடி காட்டம்

image

இந்திய இளைஞர்களின் உரிமைகளை ஊடுருவல்காரர்கள் தட்டிப் பறிப்பதாக PM மோடி கூறியுள்ளார். ஊடுருவல்காரர்களை எதிர்க்கட்சிகள் பாதுகாப்பதாக குற்றஞ்சாட்டிய PM மோடி, அவர்கள் பழங்குடியினரின் நிலங்களை பறித்துவிடுவதாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகளை சரிசெய்வதிலேயே பாஜக அரசுக்கு நேரம் போய்விடுவதாகவும், இதற்கு எதிர்க்கட்சிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் PM மோடி குறிப்பிட்டார்.

News February 6, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 603
▶குறள்:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
▶பொருள்: அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

News February 6, 2026

திமுக ஆட்சியில் மாணவர்கள் ரவுடிகளாக மாற்றம்: நயினார்

image

மதுரையில் மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதுடன், பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது நெஞ்சை உலுக்குவதாக நயினார் கூறியுள்ளார். தனது X பதிவில், CM ஸ்டாலினின் ஆட்சியில் மாணவர்கள் ரவுகளாக உருமாறுவதாகவும், இது சமூகத்திற்கே பேராபத்தானது எனவும் நயினார் விமர்சித்துள்ளார். நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!