News August 5, 2024
மாணவர்கள் உயிரோடு விளையாடுவதா?

டெல்லியில் IAS பயிற்சி மையத்தில் வெள்ள நீரில் சிக்கி, 3 மாணவர்கள் பலியானது குறித்து விளக்கமளிக்க, மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சம்பவத்தை இன்று, தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் சூரியகண்ட், உஜ்ஜல் பூயன், மாணவர்களின் உயிரோடு, பயிற்சி மையங்கள் விளையாடுவதாக கண்டித்தனர். உரிய பாதுகாப்பு வசதிகளின்றி, பயிற்சி மையங்கள் செயல்படக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
Similar News
News January 20, 2026
Spiderman-ஆக மாறும் தனுஷ்?

சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ள ‘Avengers: Doomsday’ படத்தில் தனுஷ், Spiderman கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வைரலாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்கள் குதூகலத்தில் ஆழ்ந்துள்ளனர். Doomsday பட இயக்குநர்கள் ரூசோ சகோதரர்களின் ‘The Greyman’ படத்தில் தனுஷ் ஏற்கெனவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Spiderman-ஆக எப்படி இருப்பார் தனுஷ்?
News January 20, 2026
கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் CPI

குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் கவர்னர் RN ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக CPI அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், RN ரவியின் செயல்பாடுகள் அரசியலமைப்புக்கு எதிரானது; மாநில அரசின் உரையை வாசிக்காமல், சொந்த கருத்துகளை வெளியிட்டு மரபுகளை களங்கப்படுத்துவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே, <<18768093>>காங்.,<<>> தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
News January 20, 2026
சூனியம் வைத்து கொல்லப்பட்டாரா நடிகை?

Anti-aging ஊசிகளை எடுத்துக் கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு நடிகை <<16908229>>ஷெஃபாலி <<>>ஜரிவாலா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஷெஃபாலிக்கு சூனியம் வைத்து கொன்றதாக அவரது கணவரும் நடிகருமான பராக் தியாகி கூறியுள்ளார். யார் சூனியம் வைத்தார்கள் என்பது தனக்கு தெரியும் என குறிப்பிட்ட அவர், இது போல தங்கள் மீது 2 முறை சூனியம் வைக்கப்பட்டதாகவும் கூறினார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.


