News August 5, 2024

காய்கறிகளை பச்சையாக சாப்பிடலாமா?

image

காய்கறிகளை சமைக்கும்போது, அவற்றில் காணப்படும் தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள், நொதிகள், ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளிட்ட சில சத்துகள் குறைய வாய்ப்புள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடும்போது கூடுதல் சத்துகள் கிடைக்கும் என்கிறார்கள். அதேநேரம், அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால், அஜீரண கோளாறு ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.

Similar News

News January 30, 2026

சேலம்: SBI வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

image

சேலம் மக்களே, SBI வங்கியில் 2050 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த தகுதி வாய்ந்த 21 முதல் 30 வயதுடையவர்கள் இங்கு<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.48,480 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பக்க கடைசி தேதி 18.02.2026. வங்கி வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க

News January 30, 2026

தமிழக தேர்தல்.. விரைவில் முக்கிய அறிவிப்புகள்

image

தமிழக தேர்தல் தேதி மார்ச் 2-வது வாரத்தில் வெளியாகவுள்ள நிலையில், பிப்.13 (அ) 16-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட திமுக அரசு திட்டமிடுகிறதாம். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்த அறிவிப்பு இடம்பெறலாம் என்ற இனிப்பான செய்தியும் வெளியாகியுள்ளது.

News January 30, 2026

விஜய் கட்சியுடன் கூட்டணியா?

image

தவெகவுடன் கூட்டணி பற்றி தான் இன்னமும் எந்த முடிவுக்கும் வரவில்லை என கிருஷ்ணசாமி கூறியுள்ளார். தவெகவுடன் கூட்டணியில் புதிய தமிழகம் சேரப்போவதாக வரும் தகவலுக்கு பதிலளித்த அவர், இதுவரை தவெக தரப்பில் இருந்து யாரும் தன்னுடன் பேசவில்லை எனவும், தானும் அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். அத்துடன் அரசியலில் நிரந்தர எதிரியோ, நண்பனோ இல்லை எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!