News August 5, 2024
காய்கறிகளை பச்சையாக சாப்பிடலாமா?

காய்கறிகளை சமைக்கும்போது, அவற்றில் காணப்படும் தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள், நொதிகள், ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளிட்ட சில சத்துகள் குறைய வாய்ப்புள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடும்போது கூடுதல் சத்துகள் கிடைக்கும் என்கிறார்கள். அதேநேரம், அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால், அஜீரண கோளாறு ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.
Similar News
News January 22, 2026
சிவன் கோயிலில் இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!

புராணத்தின் படி, ஆலகால விஷத்திலிருந்து தப்பிக்க தேவர்கள் சோமசூட்ச பிரதட்சண(பிறை சந்திர வடிவம்) முறையிலேயே சிவனை வழிபட்டனர். சிவன் கோயிலில் முதலில் சிவனை தரிசித்து விட்டு, இடமிருந்து வலமாக தட்சிணாமூர்த்தி வரை ஒரு முறை சுற்றவும். பிறகு, ஆரம்பித்த இடத்தில் இருந்து கோமுகி வரை மட்டும் சன்னதியை சுற்றவும். முழுவதுமாக சுற்றினால் உடலிலும், மனதிலும் எதிர்மறை எண்ணங்கள் எழுமாம். நாமும் அப்படியே வழிபடவோம்.
News January 22, 2026
CM ஸ்டாலின் மீதான வழக்கின் இறுதி விசாரணை

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் CM ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு SC-ல் இறுதி விசாரணை தொங்கி உள்ளது. சைதை துரைசாமி தரப்பில், தேர்தல் செலவு வரம்பை மீறியதாகவும், பணப்பட்டுவாடா நடந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஸ்டாலின் தரப்பில், தேர்தல் செலவுக்கு கட்டுப்பாடு இல்லாததே பெரிய பிரச்னை என வாதிடப்பட்டது.
News January 22, 2026
சற்றுமுன்: விஜய்க்கு அதிர்ச்சி

சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு பொதுச் சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ECI-யின் புதிய விதிமுறைகளின்படி, கட்சியின் வரவு செலவு கணக்கு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், தவெக இதை தவறவிட்டதாகவும், இதனால் பொதுச் சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுச் சின்னம் இல்லையென்றால் ஒவ்வொரு வேட்பாளரும் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும்.


