News August 4, 2024
தூத்துக்குடியில் நாளை உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. அந்த வகையில், நாளை திருவிழா நடைபெற உள்ளதால், அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் முக்கியத் துறைகளை தவிர்த்து பிற அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுகட்ட ஆக.10ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகும்.
Similar News
News February 5, 2026
Warning: பச்சை வெங்காயத்தை சாப்பிடுகிறீர்களா?

வெங்காயம் ஆரோக்கியமானது என்றாலும், அதை பச்சையாக சாப்பிடுவது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். வாயுத்தொல்லை, அலர்ஜி, நெஞ்செரிச்சல், வாய் துர்நாற்றம், தலைவலி, செரிமான கோளாறு, வயிற்றுப் பிரச்னை உள்ளிட்டவை ஏற்படக்கூடும். வெங்காயத்தை முறையாக சுத்தம் செய்து சாப்பிடுவது சிறந்தது எனவும், குறைந்த அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.
News February 5, 2026
தொகுதி மாறும் நட்சத்திர வேட்பாளர்கள்

2026-ல் முக்கிய அரசியல் தலைவர்கள் தொகுதி மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2021-ல் திருக்கோவிலூரில் போட்டியிட்ட பொன்முடி விக்கிரவாண்டிக்கும், கோவை தெற்கில் போட்டியிட்ட வானதி கோவை வடக்கிற்கும், விழுப்புரத்தில் போட்டியிட்ட சி.வி.சண்முகம் மயிலத்திற்கும் மாற இருக்கிறார்களாம். அதேபோல், அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை, கோவை அல்லது திருப்பூரில் ஒரு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளாராம்.
News February 5, 2026
தாயுடன் உறவில் இருந்தவரை கொன்றுவிட்டு செல்பி

தாயுடன் முறையற்ற உறவிலிருந்த நபரை கொடூரமாக கொன்ற இளைஞர், அவரது உடல் மீது கால் வைத்து செல்பி எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவியை சேர்ந்த பெண் திருமணத்தை மீறிய உறவிலிருந்துள்ளார். இது அந்த பெண்ணின் மகனுக்கு தெரியவரவே சம்பந்தப்பட்ட பசப்பாவை (54) கண்டித்துள்ளார். ஆனாலும், பசப்பா உறவை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார்.


