News August 4, 2024
இந்திய அணி மோசமான தோல்வி

இலங்கைக்கு எதிரான 2ஆவது ODI போட்டியில், இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியுள்ளது. SL நிர்ணயித்த 241 ரன்கள் இலக்கை துரத்திய IND வீரர்கள் ரோஹித் (64), அக்ஷர் (44), கில் (35) தவிர பிறர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால், 42.2 ஓவர்களில் 208 ரன்களுக்கு IND அணி ஆல்அவுட்டானது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ODI தொடரில் 1-0 என்ற கணக்கில் SL முன்னிலையில் உள்ளது. 3ஆவது போட்டி, ஆக.7இல் நடைபெறுகிறது.
Similar News
News March 13, 2026
பெண் மீது சிறுநீர் கழித்தவர் மரணம்.. அதிர்ச்சி

சென்னையில் கலைச்செல்வன் தனது நண்பருடன் ஆட்டோவில் பயணித்துள்ளனர். குடிபோதையிலிருந்த கலைச்செல்வன், ஆட்டோவில் இருந்தவாறே வெளியில் சிறுநீர் கழித்துள்ளார். இது அங்கு நடந்து சென்ற பெண் மீது பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுற்றி இருந்தவர்கள் தாக்கியதில், கலைச்செல்வன் உயிரிழந்தார். எனவே, அவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
News March 13, 2026
தவெக கூட்டணி முடிவில் திடீர் மாற்றமா?

NDA-வில் தவெக இணைய வாய்ப்பிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உரிய அங்கீகாரம் கிடைத்தால் NDA கூட்டணியில் சேர பெரும்பாலான <<19372536>>மா.செ.,க்கள் பச்சைக் கொடி<<>> காட்டியுள்ளனராம். இதனையடுத்து, விஜய்யின் நெருங்கிய நண்பர் ஒருவர் பாஜக தலைமையிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. NDA-வில் தவெகவுக்கு 45 சீட் கொடுக்க முன்வந்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
News March 13, 2026
இனி RTI-ல் பொதுத்தேர்வு விடைத்தாளை பெறலாம்!

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை RTI-ன் கீழ் விண்ணப்பித்து பெறலாம் என மாநில தகவல் ஆணையம் (SIC) தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த SIC, RTI கட்டண விதிகளின்படி பக்கத்திற்கு ₹2 செலுத்தி விடைத்தாள் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. விடைத்தாள் பராமரிக்கப்படும் அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்றுக்கொள்ளலாமாம்.


