News August 4, 2024
பிரதமர் மோடியிடம் அறிக்கை தாக்கல்

வயநாடு நிலச்சரிவு தொடர்பான ஆய்வறிக்கை, பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. வயநாடு மாவட்டத்தில், ஜூலை 29இல் நிகழ்ந்த மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 350க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன், அது தொடர்பான அறிக்கையில் பிரதமர் மோடியிடம் நேரில் வழங்கியுள்ளார்.
Similar News
News January 25, 2026
டாஸ்மாக் கடைகள் மேலும் 2 நாள்கள் விடுமுறை

திருவள்ளுவர் தினமான ஜன.16-ல் ஏற்கெனவே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி நாளையும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது. மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கள்ளச் சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல், பிப்.1 வள்ளலார் நினைவு தினத்திற்கும் டாஸ்மாக் கடைகள் விடுமுறையாகும்.
News January 25, 2026
கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்: விஜய்

யாருக்காகவும் எதற்காகவும் அரசியலில் சமரசம் செய்யவே கூடாது. தயவு செய்து ஒற்றுமையாக இருந்து உழைத்து வெற்றி பெற வேண்டும் என கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் என்று தொண்டர்களிடம் விஜய் தெரிவித்துள்ளார். எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவீர்கள்தானே என்று தொண்டர்களிடம் கேள்வி எழுப்பிய அவர், ‘2026 தேர்தலில் உண்மையாக, சத்தியமாக, உறுதியாக, ஒற்றுமையாக உழைப்போம்’ என்று உறுதிமொழி எடுக்கவும் வைத்தார்.
News January 25, 2026
அதிக தொகுதிகளை கேட்பது ஏன்? விஜய பிரபாகரன் விளக்கம்

2026 தேர்தல் நெருங்கிய நிலையில், தேமுதிக இன்னும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. திமுக, அதிமுக என இரு கட்சிகளிடமும் பேசி வரும் தேமுதிக, அதிக தொகுதிகளை கேட்பதால் கூட்டணி இறுதியாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கான உரிமையையே கூட்டணி கட்சிகளிடம் கேட்பதாகவும், உங்களை ஆட்சியில் அமர வைக்கவே 20-30 தொகுதிகளை கேட்பதாகவும் விஜய பிரபாகரன் விளக்கமளித்துள்ளார். DMDK கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா?


