News August 3, 2024
நாயை மீட்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

மேட்டூர் அணை பகுதியில் சிக்கியுள்ள நாயை மீட்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 16 கண் பகுதியில் 5 நாள்களுக்கு முன் சிக்கிய நாயை, NDRF குழு மீட்க ஆணையிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ட்ரோன் மூலம் நாய்க்கு உணவு வழங்குவதாகவும், நீர் வரத்து குறைந்துள்ளதால் NDRF உதவி தேவைப்படாது எனவும் தமிழக அரசு கூறியது. இதையடுத்து விசாரணை ஆக.6க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News January 21, 2026
பள்ளிகளுக்கு மீண்டும் 3 நாள்கள் விடுமுறை

பொங்கல் விடுமுறை முடிந்து இந்த வாரம் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கிவிட்டன. இனி எப்போது விடுமுறை வரும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்குதான் இந்த ஹேப்பி நியூஸ். ஆம்! ஜன.24, 25 (சனி, ஞாயிறு) மற்றும் குடியரசு தினமான ஜன.26 எனத் தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை வருகிறது. எனவே, மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இப்போதே பயணத்தை திட்டமிடுங்கள்.
News January 21, 2026
மெடிக்கல் மிராக்கிள்: ஆண் வயிற்றில் கர்ப்பப் பை!

ம.பி.,யில் இயங்கி வரும் பிரபல தனியார் ஸ்கேன் மையத்தில் 47 வயது ஆண் ஒருவர், அடிவயிறு வலியால் ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார். ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவருக்கு கருப்பை வளர்வதாக முடிவுகள் வந்ததை பார்த்து ஆடிப்போயுள்ளார். இதையடுத்து, ஒரு ஆணுக்கு எப்படி கருப்பை வளரும் என அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், சுகாதாரத்துறையும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
News January 21, 2026
ஊழல் ஆட்சியை நிச்சயம் தோற்கடிப்போம்: பியூஷ்

NDA கூட்டணியில் அமமுக இணைந்தது தனிப்பட்ட முறையில் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். Ex CM ஜெயலலிதாவின் தலைமையில் TN முதன்மை மாநிலமாக இருந்ததாக கூறிய அவர், அவர்கள் வழங்கிய நல்லாட்சியை NDA கூட்டணி வழங்கும் என்றார். மேலும், ஊழல் நிறைந்த திமுகவை தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார்.


