News July 28, 2024
மதுவுடன் ஓவியா அட்வைஸ்!

‘களவாணி’ படம் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமான ஓவியா, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். குறிப்பாக, சமூக வலைதளங்களில் அவருக்காக ஆர்மியும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், அவரது இன்ஸ்டா பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. மது அருந்தும் புகைப்படத்தை பகிர்ந்து, குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என அவர் குறிப்பிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.
Similar News
News July 4, 2025
GST வரியை குறைக்க முடிவு.. விலை குறையும் பொருள்கள்!

56-வது GST கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் டூத்பேஸ்ட், சோப்பு, ஐஸ்கீரிம் ஆகியவை 18% லிருந்து 12% பட்டியலுக்கு மாற வாய்ப்புள்ளது. மேலும், நெய், வெண்ணெய், குடை, ஜாம், பழச்சாறு, மருந்துப் பொருள்கள் 5% வரி பட்டியலுக்கு மாற்றப்பட உள்ளதாம். இதனால் நடுத்தர மக்களின் சுமை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News July 4, 2025
தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்: விஜய்

பரந்தூர் மக்களை CM ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை ஸ்டாலின் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லை என்றால் பரந்தூர் மக்களை அழைத்து வந்து தலைமைச் செயலகத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிடும் நிலை உருவாகும் எனவும் விஜய் எச்சரித்துள்ளார்.
News July 4, 2025
முதல்வர் வேட்பாளர் விஜய் .. தவெக தலைமையில் கூட்டணி

2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான முழு அதிகாரமும் விஜய்க்கு அளிக்கப்படுவதாகவும் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு நடைபெறும் என்றும், அக்., முதல் டிச., வரை தமிழகம் முழுவதும் விஜய் மக்களை சந்திப்பார் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.