News June 27, 2024
வெற்றிக்கு தனி மனிதர்கள் காரணமில்லை: மார்க்ரம்

வெற்றிக்கு கேப்டன் மட்டுமே காரணமாக இருக்க முடியாது என தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார். அணியின் வெற்றி எங்களின் குழு முயற்சிக்கு கிடைத்த பரிசு என்று தெரிவித்த அவர், இந்த வெற்றி அணியில் விளையாடியவர்கள் மற்றும் வெளியில் இருந்து உதவியவர்களையே சாரும் என்றார். இறுதிப் போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
எங்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம்: பிரேமலதா

திரையுலகில் இருந்து வந்த விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடுவது இயல்பான ஒன்றுதான்; நாங்கள் விஜயகாந்தை பார்த்து வளர்ந்தவர்கள். எங்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். சரியான திட்டமிடல் இல்லாமல் விஜய் பரப்புரை செய்ததாக கூறிய அவர், விஜயகாந்தை மற்றவர்களுடன் (விஜய்) ஒப்பிட்டு பேசுவது தவறு என்றும், தொண்டர்களின் விருப்பப்படி கூட்டணி அமையும் எனவும் தெரிவித்தார்.
News September 15, 2025
கமல் சொன்ன ‘கிரியா ஊக்கி’ அர்த்தம் தெரியுமா?

‘கிரியா ஊக்கி’ – இன்று அதிகம் தேடப்படும் சொல்லாக உள்ளது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், இச்சொல்லை பயன்படுத்தியுள்ளார். கிரியை என்பதற்கு செயல் என்று பொருள். அப்படியானால், ‘கிரியா ஊக்கி’ என்பதை செயல்படுவதற்கான ஊக்கம், செயலூக்கம் என பொருள் கொள்ளலாம். அரசியலில் தனக்கு உந்துதலாக, தொடர்ந்து உழைக்க உத்வேகம் கொடுப்பவர் அண்ணா எனக் குறிப்பிட்டு இச்சொல்லை பயன்படுத்தியுள்ளார் கமல்.
News September 15, 2025
வாரத்தின் முதல் நாளிலேயே சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவுடன், 81,785-ல் நிறைவடைந்தது. அதே நேரத்தில் நிஃப்டி 44 புள்ளிகள் சரிந்து 25,069-ல் வர்த்தகம் முடிந்துள்ளது. DLF, ஏபிபி இந்தியா, HDFC வங்கி உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிந்துள்ளன. அதேநேரம் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் உள்ளிட்டவைகளின் பங்குகள் உயர்ந்துள்ளன.