News June 27, 2024
ஜூன் 27 வரலாற்றில் இன்று!

*1838 – ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதிய வங்க கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி பிறந்தநாள் இன்று. *1898 – உலகை சுற்றும் முதலாவது பயணத்தை கனடாவைச் சேர்ந்த ஜோசுவா சுலோக்கம் வெற்றிகரமாக முடித்தார்.
*1941 – ரொமானியா லாசி நகரில் யூதர்களுக்கு எதிரான படுகொலைகள் ஆரம்பித்தது. இதன் போது குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர். *2013 – சூரியனை ஆய்வு செய்வதற்காக நாசா விண்கலம் ஒன்றை ஏவியது.
Similar News
News August 21, 2025
TN-க்கு மோடி செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்: விஜய்

PM மோடி மற்றும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்த விஜய் TN மக்களுக்காக இரு முக்கிய கோரிக்கைகளையும் வைத்துள்ளார். தமிழக மக்களுக்கு நன்மை செய்வதாக PM மோடி நினைத்தால், முதலில் கச்சத்தீவை மீட்டு கொடுங்கள் என்றார். மேலும், நாள்தோறும் நீட் தேர்வால் நடக்கும் அவலங்களை பேசவே அச்சமாக இருப்பதாக கூறிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News August 21, 2025
தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் 5 விஷயங்கள்

தாம்பத்ய வாழ்க்கையை பின்வரும் விஷயங்கள் பாதிக்கலாம் என்கின்றனர் டாக்டர்கள்: *வேலை, பிசினஸ், குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படும் தீவிர மனஅழுத்தம் பாலியல் நாட்டத்தை பாதிக்கும் *போதுமான தூக்கம் இல்லாதது உடலையும் உள்ளத்தையும் சோர்வாக்கும் *ஹார்மோன்கள் சமநிலை பாதித்தல் *தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை *உறவில் திருப்தி ஏற்படாத நிலை. சிறந்த தீர்வுக்கு மனநல கவுன்சிலர், பாலியல் மருத்துவரை அணுகவும்.
News August 21, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு தகவல்

பொங்கல் பரிசுத் தொகையாக ரேஷன் கார்டுக்கு தலா 5,000 வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு தீபாவளி பண்டிகை நாளில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, ₹10,000 கோடி தேவை என்பதால், அதற்கான நிதி ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு நிதித்துறைக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாம். தீபாவளிக்கு ஜிஎஸ்டி குறைப்பை அறிவிக்க இருப்பதாக பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.