News June 26, 2024

கென்யாவில் பதற்றம்: இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

image

வரிகளை உயர்த்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை கென்யா நாடாளுமன்றம் நிறைவேற்றியதை தொடர்ந்து, அங்கு வன்முறை வெடித்தது. தலைநகர் உள்பட நாடு முழுவதும் போராட்டங்களும், மோதல்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், அங்கு வாழும் இந்தியர்கள், அத்தியாவசியம் இல்லாமல் வெளியில் நடமாட வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அரசு தரவுகளின்படி, கென்யாவில் 20 ஆயிரம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

Similar News

News March 28, 2026

தஞ்சை: ரயில்வேயில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

image

தெற்கு மத்திய ரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய:<> CLICK HERE<<>>.
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 28, 2026

சென்னை: சொத்து தகராறா? Whatsapp-பண்ணுங்க

image

சென்னை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘7217711814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். (இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க)

News March 28, 2026

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ₹3,000.. தேர்தல் வாக்குறுதி

image

அமமுக <<19498165>>தேர்தல் வாக்குறுதிகளை<<>> TTV தினகரன் இன்று வெளியிட்டார். அதில் முக்கியமாக, *வேலையில்லா பட்டதாரிகளுக்கு ₹3,000 வழங்கப்படும். *அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் கட்டணங்கள் ரத்து. *திருநங்கைகள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும். *ஆண்கள் சுய உதவிக் குழுக்கள் அமைத்து நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

error: Content is protected !!