News June 18, 2024
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வரும் 22ஆம் தேதி முதல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நகரின் சில பகுதிகளில் இரவு நேரத்தில் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 22, 2026
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டி, இன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில், பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறையினர், நகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் அனைவரும் பங்கு பெற்றனர்.
News March 22, 2026
BREAKING: பாஜக பட்டியலில் இருந்து தமிழிசை நீக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கப்பட்டுள்ளது. 40 பேர் கொண்ட பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் எல்.முருகன், அண்ணாமலை பெயர்கள் உள்ளபோதும் தமிழிசை பெயர் நீக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை கிளப்பியுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் தமிழிசை பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 22, 2026
புதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் இவர்கள் தான்!

புதுச்சேரியில் அதிமுக போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை EPS வெளியிட்டுள்ளார். அதன்படி, உப்பளம் தொகுதியில் முன்னாள் MLA-வும் புதுச்சேரி அதிமுக மாநில செயலாளருமான அன்பழகன் களமிறங்குகிறார். அதேபோல், உருளையன்பேட்டை தொகுதியில் காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் NR காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.


