News June 17, 2024

எம்.ஜி.ஆர். முதல்வரானதற்கு காரணமாக இருந்த கவிஞர்

image

எம்.ஜி.ஆர். முதல்வரானதற்கு கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் வரிகள் முக்கிய காரணம் என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார். தமுஎகச நிகழ்ச்சியில் பேசிய அவர், “உழைக்கும் வர்க்கத்தினர் படும் பாடுகளை தன்னுடைய பாடல் வரிகள் மூலம் எழுதி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவரை தனக்கு பக்கபலமாக எம்.ஜி.ஆர். வைத்துக் கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 19, 2026

புதுவை வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடும் பாஜக

image

புதுச்சேரியில் லட்சிய ஜனநாயகக் கட்சியை கூட்டணியில் சேர்க்க என்.ஆர்.ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். என்.ஆர்.காங்கிரஸ் உடன் உடன்பாடு ஏற்படாத நிலையில், பாஜக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. NDA கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 12, அதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜக போட்டியிடும் 12 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகவுள்ளது.

News March 19, 2026

சற்றுமுன்: விலை சரசரவென குறைந்தது

image

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால், பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், காய்கறிகள் தேக்கம் அடைந்ததால், விலை குறைந்துள்ளது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி, பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை கிலோவுக்கு ₹5 முதல் ₹10 வரை குறைந்துள்ளது. அதேபோல், TN முழுவதும் பல இடங்களில் விலை குறைந்துள்ளது.

News March 19, 2026

தவெகவா? தனிக் கட்சியா? குழப்பத்தில் ராமதாஸ்!

image

பாமக சின்னம் குறித்த வழக்கு மே 10-ம் தேதிக்கு பிறகே விசாரணை என்ற கோர்ட் உத்தரவு ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. கடந்த வாரமே கூட்டணிக்கான வாகனம் அருகே வந்துவிட்டதாக ராமதாஸ் பேசியிருந்தார். ஆனால், தற்போது வரை முடிவை அறிவிக்காமல் குழப்பத்தில் உள்ளார். தைலாபுரத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தவெகவுடன் செல்லலாம் என சிலரும், தனியாக போட்டியிடலாம் என சிலரும் சொன்னதாக தகவல் கசிந்துள்ளது.

error: Content is protected !!