News June 17, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூன் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News March 25, 2026

இராம்நாடு: கார் & பைக் நேருக்கு நேர் மோதி விபத்து

image

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இன்று (மார்ச்.25) கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து மண்டபம் போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர்.

News March 25, 2026

போர்.. இந்தியாவுக்கு மகிழ்ச்சி செய்தி

image

மேற்காசிய போர் பதற்றத்துக்கு இடையே, ரஷ்யாவிலிருந்து 60 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் வாங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான தடையினை US தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதனால் தட்டுப்பாடின்றி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் கிடைக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.

News March 25, 2026

சோனியா காந்திக்கு என்ன ஆச்சு? ரிப்போர்ட்

image

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி சர் கங்காராம் ஹாஸ்பிடல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சோனியா காந்திக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ள நிலையில் காற்று மாசு, குளிர் காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது; அவரது உடல்நிலையை தற்போது டாக்டர்கள் குழு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!