News June 17, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இன்று (ஜூன் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News January 21, 2026
ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன?

பாமக (அன்புமணி), அமமுக என NDA கூட்டணியில் அடுத்தடுத்து கட்சிகள் இணைந்து வருகின்றன. அதேநேரம், திமுக, மாற்றுக் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை இணைத்து வருகிறது. இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ், கூட்டணி தொடர்பாக இன்று மாலை தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தவுள்ளாராம். எனவே, அவரது முடிவும் நாளைக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைப்பார்?
News January 21, 2026
RR, RCB-க்கு கெடு விதித்த BCCI

ஜன.27-ம் தேதிக்குள் தங்களது சொந்த மைதானங்களை உறுதிப்படுத்துமாறு RR, RCB அணிகளுக்கு BCCI காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<18497857>>பெங்களூரு மைதானத்தில்<<>> கடந்த ஜூன் மாதம் கூட்டநெரிசலில் 11 பேர் பலியானதை அடுத்து, அங்கு இதுவரை ஒரு போட்டி கூட நடத்தப்படவில்லை. அதேபோல், கடந்த 2 ஆண்டுகளாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தல் நடைபெறாததால், ஜெய்பூரில் போட்டி நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
News January 21, 2026
EPS-க்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த TTV

ஜெயலலிதாவின் நல்லாட்சியை NDA கூட்டணி சார்பில் TN-ல் மீண்டும் அமைத்திட நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என TTV தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் TN-க்கு புதிய வெளிச்சத்தை பாய்ச்ச வரலாற்று வெற்றியை படைப்போம் என்றும், கூட்டணியில் இணைந்த அமமுகவை மனதார வரவேற்று வாழ்த்திய EPS-க்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


