News June 16, 2024
ஜூன் 30 முதல் மீண்டும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி

பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி, ஜூன் 30 முதல் மீண்டும் தொடங்குகிறது. 2014இல் பிரதமரானது முதல், ஞாயிறுதோறும் வானொலி மூலம், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் அவர் பேசி வருகிறார். அவ்வாறு பேசும்போது, சமூகத்தில் பல்வேறு விஷயங்களில் சாதித்தவர்களை வானொலி மூலம் பாராட்டுவார். இந்த நிலையில், 3ஆவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, அவர் பேச உள்ள முதல் வானொலி உரை ஜூன் 30 ஒலிபரப்பப்பட உள்ளது.
Similar News
News March 18, 2026
நெல்லை அருகே தாய்-மகன் கைது

மானூர் அருகே ராமையன்பட்டி கண்டியப்பேரி கலாம்நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்(30). கடந்த 14-ம் தேதி மேய்ச்சலுக்கு சென்ற இவரது ஆடு திருடு போனது. இது குறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த சாந்தி(53), அவருடைய மகன் சுவாமிநாதன்(31) ஆகியோர் ஆடு திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
News March 18, 2026
ஸ்டாலினுடன் தொடர்வது ஏன்? வைகோ புதிய விளக்கம்

வேண்டா வெறுப்பாக திமுகவுடன் மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் தொடர்வதாக EPS விமர்சித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் மதிமுக தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார். அப்போது பேசிய அவர், கருணாநிதியின் இறுதிக் காலத்தில் அவருக்கு அளித்த வாக்குறுதிக்காக ஸ்டாலினுடன் உள்ளேன் என்றார். அதை நிறைவேற்றும் வகையில் மதிமுக செயல்படுவதாகவும், தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெல்வது உறுதி என்றும் கூறினார்.
News March 18, 2026
அமெரிக்காவில் RSS மீது தடையா? இந்தியா மறுப்பு!

RSS மற்றும் RAW மீது தடைவிதிக்க வேண்டுமென US-ன் சர்வதேச மத சுதந்திர <<19396338>>ஆணையத்தின் பரிந்துரையை<<>> மத்திய பாஜக அரசு மறுத்துள்ளது. இந்த பரிந்துரை உள்நோக்கம் & பாரபட்சமானது என கூறியுள்ளது. இது இந்திய இறையாண்மையை தவறாக சித்தரிக்கும் முயற்சி என்றும், இந்தியா மீது பழிபோடுவதை விடுத்து, US-ல் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் & வெறுப்பு சூழல் ஆகிய பிரச்னைகளில் அமெரிக்கா கவனம் செலுத்தவும் வலியுறுத்தியுள்ளது.


