News June 15, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூன் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Similar News
News November 13, 2025
திமுகவில் இணைந்தனர்

அதிமுக, OPS அணியிலிருந்து விலகிய 500-க்கும் மேற்பட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதுகுறித்து பேசிய மருது அழகுராஜ், புறக்கணிக்கக்கூடிய, துரத்தி அடிக்கப்படக்கூடிய, அபகரிப்பு அரசியலில் இருந்து தப்பி வரக்கூடியவர்களுக்கு அறிவாலயம் அன்பு சரணாலயமாக உள்ளது. தனது ஆதரவாளர்கள், அதிமுக, OPS அணியில் இருந்து விலகிய ஊராட்சி, ஒன்றிய தலைவர்கள் உள்பட 500 பேர் திமுகவில் இணைந்ததாக கூறினார்.
News November 13, 2025
குபேர சம்பத்தை பெற உதவும் வழிபாடு

காலையில் எழுந்து குளித்து, ஏதாவது ஒரு இனிப்பை செய்யுங்கள். அத்துடன் ₹1 நாணயமும் வைக்க வேண்டும். வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து, இடது கையால், வலது கையை மூடுங்கள். நெஞ்சுக்குழி அருகே கைகளை வைத்து, ‘ஓம் கும் குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். அடுத்த நாள், ₹1-ஐ கோயில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். அதே போல, இனிப்பை வடக்கு திசை பார்த்தவாறு வீட்டிற்கு வெளியே தூவி விட வேண்டும்.
News November 13, 2025
சருமம் முதல் இதயம் வரை.. முள்ளங்கி இலைகளின் நன்மை

குளிர்காலத்தில் தொற்றுநோய்களில் இருந்து தப்பிக்க சில உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அந்தவகையில், முள்ளங்கி இலைகளை உணவில் சேர்த்து சமைப்பது பல ஆரோக்கியங்களை தரும். முள்ளங்கி இலைகளை நன்கு கழுவிவிட்டு சாலட்டில் (அ) சாண்ட்விச்சில் சேர்த்து சாப்பிடலாம். கீரை போல சமைத்தும் (அ) சாறாகவும் குடிக்கலாம். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட அவற்றின் பலன்களை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.


