News June 6, 2024

பாண்டிச்சேரியில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு?

image

கமல் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடக்க உள்ளதாகவும், அங்குள்ள விமான நிலையத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன் நடிக்கும் முக்கியமான சண்டைக் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. கேங்ஸ்டர் படமாக உருவாகும் இது, இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Similar News

News August 19, 2025

NDA கூட்டணி கட்சிகள் ஆலோசனை

image

டெல்லியில் NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. துணை ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதேபோல், INDIA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்று பிற்பகல் 12:30 மணிக்கு கூட்டணி கட்சிகள் ஆலோசிக்க உள்ளன.

News August 19, 2025

கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு.. இன்று விசாரணை

image

மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. சட்டப்பேரவை இயற்றிய மசோதாக்களை கிடப்பில் போடுவதாக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அதில், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் கவர்னரும், ஜனாதிபதியும் முடிவெடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதை எதிர்த்து ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.

News August 19, 2025

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

image

கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ₹73,880-க்கும், கிராமுக்கு ₹40 குறைந்து ₹9,235-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹126-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,26,000-க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!