News August 19, 2025

கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு.. இன்று விசாரணை

image

மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. சட்டப்பேரவை இயற்றிய மசோதாக்களை கிடப்பில் போடுவதாக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அதில், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் கவர்னரும், ஜனாதிபதியும் முடிவெடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதை எதிர்த்து ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.

Similar News

News December 9, 2025

ஈரோடு: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (டிச.9) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100க்கும், சைபர் கிரைம் எண். 1930-க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News December 9, 2025

இந்தியாவில் ₹1.5 லட்சம் கோடி முதலீடு: மைக்ரோசாப்ட்

image

இந்தியா தனது லட்சியத்தை அடைவதற்கு மைக்ரோசாப்ட் துணை நிற்கும் என்று சத்யா நாதெல்லா உறுதியளித்துள்ளார். இதுபற்றி PM மோடியுடன் உரையாடியதாகவும், இந்தியாவின் AI வளர்ச்சிக்கு ₹1.5 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இத்தொகையானது, ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட்டின் மிகப்பெரிய முதலீடு என்றும் இந்தியாவின் AI எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்பு, திறனை உருவாக்கிட உதவும் எனவும் கூறியுள்ளார்.

News December 9, 2025

கில்லர் லுக்கில் மிருணாள் தாக்கூர்

image

மிருணாள் தாக்கூர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள், ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதில் அவர், கருப்பு நிற உடை, மின்னும் காதணிகள், பிரகாசமான முகம், வசீகரமான பார்வை என மொத்தமாக ரசிகர்களை ஈர்க்கிறார். மிருணாளின் கில்லர் லுக் ஸ்டைலிஷ் போட்டோக்கள், உங்களுக்கும் பிடிச்சிருந்த ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!