News May 24, 2024
தேர்தல் முடிவுக்கு பின் புதிய ரேஷன் அட்டை

தமிழகத்தில் 2 லட்சம் பேர் ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகை ₹1000 வழங்கும் திட்டத்தால், கடந்த ஜூலை மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் மக்கள் தவித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 5, 2025
Tech Tips: தெரியாம Photo, Video டெலீட் பண்ணிட்டீங்களா?

உங்கள் ஃபோனில் டெலீட் ஆன ஃபோட்டோ, வீடியோக்களை இந்த ஒரு சீக்ரெட் APP-ஐ வைத்து Recover செய்யலாம். DUMPSTER என்ற செயலியை Playstore- ல் இருந்து டவுன்லோடு செய்யுங்கள். அதில் காட்டும் DEEP SCAN ஆப்ஷனை க்ளிக் செய்தால், நீங்கள் டெலீட் செய்த ஃபோட்டோ, வீடியோக்கள் காட்டும். அதில் தேவையானவற்றை நீங்கள் Recover செய்யலாம். இதன்மூலம் 60% ஃபோட்டோ, வீடியோக்களை உங்களால் திரும்ப பெறமுடியும். SHARE.
News September 5, 2025
BREAKING: இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் வார்னிங்

கட்சியில் இருந்து விலகியவர்களை(OPS, சசிகலா, TTV) மீண்டும் இணைக்க EPS-க்கு செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார். 2026 தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக தேர்தலில் சந்தித்தால்தான் வெற்றி பெற முடியும் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருதுவதாகவும் கூறியுள்ளார். 10 நாள்களுக்குள் நல்ல முடிவை எடுக்காவிட்டால் ஒத்த கருத்துடைய தலைவர்களை ஒன்றிணைத்து, ஒருங்கிணைப்பு பணியை செய்வோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
News September 5, 2025
BIG BREAKING: முடிவை அறிவித்தார் செங்கோட்டையன்

2017-க்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்த அதிமுக, கட்சியில் இருந்து வெளியில் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து விலகியவர்கள், எவ்வித நிபந்தனைகளும் இன்றி கட்சியில் இணைய தயாராக இருப்பதாகவும், விரைந்து முடிவுகளை எடுக்கவில்லை என்றால் ஒன்றிணைக்கும் நாங்கள் இணைந்து செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.