News May 24, 2024
“DK ஒரு சாம்பியன்” நடிகர் சித்தார்த் புகழாரம்!

தினேஷ் கார்த்திக் குறித்து நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “சிறப்பாக சென்று வாருங்கள் நண்பா! நீங்கள் ஒரு மிகச்சிறந்த சாம்பியன். அனைத்து சாத்தியமான வழியிலும் ஒரு மிகச்சிறந்த வீரர்” என்று பதிவிட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் இந்தியாவுக்காக 24 டெஸ்ட் போட்டிகள், 94 ODI போட்டிகள், 60 டி20 போட்டிகள் என்று மொத்தம் 180 போட்டிகளில் ஆடியுள்ளார்.
Similar News
News August 18, 2025
நான் இறந்துவிட்டேன்.. கல்லூரி மாணவர் விபரீத முடிவு

‘நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்றால், நான் இறந்துவிட்டேன் என அர்த்தம். எனது மரணம் என் சொந்த முடிவு. ஓராண்டாக திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்.’ நொய்டாவில் தற்கொலை செய்த மாணவர் சிவம் டே(24) எழுதிய வரிகள் இவை. மாணவன் 2 ஆண்டுகளாக கல்லூரிக்கு வரவில்லை எனவும், அதனை கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News August 18, 2025
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? திருச்சி சிவா பதில்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக திமுகவின் திருச்சி சிவாவை களமிறக்க ‘INDIA’ கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது வரை யாரும் பரிசீலனையில் இல்லை என INDIA கூட்டணி தரப்பு கூறியது. டெல்லியில், வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டத்தையும் INDIA கூட்டணி கூட்டியுள்ளது. இதனிடையே, வேட்பாளர் தேர்வு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.
News August 18, 2025
நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மழை கொட்டும்: IMD

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பின்னர் கரையை கடக்க உள்ளது. இந்நிலையில், இன்றிரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மேலும், ஆக.24 வரை மழை நீடிக்குமாம். கவனமா இருங்க நண்பர்களே!