News May 24, 2024
அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்க பாகிஸ்தான் திட்டம்

நஷ்டத்தில் இயங்கி வரும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், ரூஸ்வெல்ட் ஓட்டல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் தவித்துவரும் பாகிஸ்தானில் பண வீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனை சமாளிக்க உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்றவற்றிடம் இருந்து கடன்களை வாங்கி வருகிறது.
Similar News
News August 18, 2025
ECI தலைமை ஆணையருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்?

ECI-ன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர INDIA கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3ல் இரு பங்கு ஆதரவு பெற்று இந்த பதவி நீக்க தீர்மானம் வெற்றிபெற்றால், அந்த அதிகாரியை விசாரணை செய்ய குழு அமைக்கப்படும். பின்னர் குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
News August 18, 2025
பச்சைப்பொய் கூறும் CM ஸ்டாலின்: EPS விளாசல்

525 வாக்குறுதிகளில் ஸ்டாலின் அரசு 10% கூட நிறைவேற்றாமல் 98% நிறைவேற்றிவிட்டதாக பச்சைப்பொய் கூறி வருகிறது என EPS சாடியுள்ளார். கலசபாக்கத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், சிலிண்டருக்கு ₹100 மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு வாக்குறுதிகள் என்ன ஆனது என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். உங்கள் கருத்து?
News August 18, 2025
4 நாள்களில் ₹404+ கோடி.. வசூல் சூறாவளியாக மாறிய ‘கூலி’..!

ரஜினி நடிப்பில் ரிலீசாகி வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது ‘கூலி’ திரைப்படம். ஆக. 14-ல் வெளியான இப்படம் 4 நாள்களில் உலகளவில் ₹404+ கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் உலகளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை கூலி படைத்திருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழில் முதல் ₹1,000 கோடி வசூலான படம் என்ற சாதனையை ‘கூலி’ படைக்குமா?