News May 23, 2024
ஷாருக் கான் நலமாக இருக்கிறார்

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் Heat stroke காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில், அவர் நலமாக இருப்பதாக அவரது மேலாளர் பூஜா தத்லானி தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ச் செய்யப்படுவார் என்றும், ஒரு வாரம் ஓய்வெடுக்க முடிவு செய்திருப்பதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News March 11, 2026
இரவில் தூங்குவதற்கு எந்தப் பக்கம் சிறந்தது?

இரவு தூங்கும் போது, எந்த பக்கம் படுத்தால் நல்லது என்ற கேள்வி பலருக்கும் உண்டு *இடது பக்கமாக படுத்தால், உணவு நிரம்பிய இரைப்பையானது கல்லீரலை அழுத்தாது. இதனால், செரிமானம் சிறப்பாக ஊக்குவிக்கப்படும். அதே போல, ரத்த ஓட்டமும் சீராக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். *வலது பக்கமாக படுக்கும்போது சுவாசக் குழாய் அழுத்தப்படும். மேலும், குறட்டை வருமாம். நீங்க எந்த பக்கம் படுக்குறீங்க?
News March 11, 2026
அதிமுக + விஜய் கூட்டணி.. முடிவை தெரிவித்தார்

NDA கூட்டணியில் விஜய் இணைவது தொடர்பாக, <<19355301>>TTV தினகரனை<<>> தொடர்ந்து செல்லூர் ராஜுவும் பேசியுள்ளார். தங்களது கூட்டணியில் சேர்ந்தால், விஜய்யை தூக்கி வைத்து கொண்டாடுவோம் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் (அதிமுக) தோழமையை மதிக்கக் கூடியவர்கள் என்றும் செல்லூர் ராஜு குறிப்பிட்டுள்ளார். NDA கூட்டணியில் விஜய்யை இணைக்க பாஜக காய் நகர்த்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
News March 11, 2026
BREAKING: மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் CM ஸ்டாலின், வைகோ முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் மதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 4-ல் வெற்றி பெற்றது.


