News May 22, 2024
பொது இடத்தில் மாஸ்க் அணிய அறிவுரை

உலகம் முழுவதும் KP2 வகை கொரோனா தொற்று பரவி வருவதால் பொது இடங்களில் மாஸ்க் அணிய பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் குறைந்த அளவிலேயே இந்த வகை தொற்று பதிவாகியிருப்பதால், அச்சப்படத் தேவையில்லை என்றும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News August 17, 2025
50% இடஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கப்படும்: ராகுல்

எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தினாலேயே பாஜக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிஹாரில் பேசிய அவர், பாஜக உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது எனவும், 50% எனும் இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்காது என்றும் கூறியுள்ளார். மேலும், INDIA கூட்டணி ஆட்சியமைத்ததும் 50% உச்ச வரம்பு நீக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
News August 17, 2025
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு குவியும் வாழ்த்து!

துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழிசை, அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொது வாழ்வில் நீண்ட ஆண்டுகளாக அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் தனித்துவமாக அறியப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக தேர்வாகவிருப்பது பெரும் மகிழ்ச்சி என அண்ணாமலை தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News August 17, 2025
₹200 கோடி சம்பளம் தராததால் அஜித் எடுத்த முடிவு

‘AK 64’ படத்தில் நடிக்க அஜித் ₹200 கோடி சம்பளம் கேட்டதால், சில தயாரிப்பாளர்கள் பின் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், பட விநியோகஸ்தர் ராகுல் அப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார். ஆனால், அஜித் கேட்ட தொகையை தர முடியாது என்பதால், இருவரும் ஒரு புதிய ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதாவது டிவி, OTT உரிமம் விற்பனையாகும் தொகை அஜித்துக்கு, தியேட்டர் வசூல் தயாரிப்பாளருக்கு என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாம்.