News August 17, 2025
50% இடஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கப்படும்: ராகுல்

எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தினாலேயே பாஜக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிஹாரில் பேசிய அவர், பாஜக உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது எனவும், 50% எனும் இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்காது என்றும் கூறியுள்ளார். மேலும், INDIA கூட்டணி ஆட்சியமைத்ததும் 50% உச்ச வரம்பு நீக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
BREAKING: இன்று அனைத்து பள்ளிகளுக்கும்.. வந்தது உத்தரவு

இன்று அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மாணவர்களின் கல்வித் தரம், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது, மாணவர்களுக்கான அரசுத் திட்டங்களை எடுத்துரைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ளும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்படும்.
News December 5, 2025
சிந்தனையை தூண்டும் PHOTOS

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடப்பதை, எப்படி நினைக்கிறீர்கள், உணர்கிறீர்கள் என்ற அடிப்படையில்தான் உங்கள் சிந்தனை வடிவமைக்கப்படுகிறது. உண்மையான வளர்ச்சி என்பது என்னவென்று சில புகைப்படங்கள் நம் சிந்தனையை தூண்டுகின்றன. அவற்றை உங்களுக்காக மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அனைவரையும் சிந்திக்க தூண்டும் இந்த போட்டோக்களை SHARE பண்ணுங்க.
News December 5, 2025
புதிய தொழிலாளர் சட்டம்.. எப்போது அமல் தெரியுமா?

அடுத்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. இதற்காக 4 தொழிலாளர் சட்டங்களுக்கான விதிகளை இறுதி செய்யும் செயல்முறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. புதிய தொழிலாளர் சட்டமானது தொழிலாளர்களுக்கு அதிக பாதுகாப்பு, சிறந்த சலுகைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என மத்திய அரசு கூறுகிறது. ‘சம வேலைக்கு சம’ ஊதியம் என்ற விதியால் ஆண்களும், பெண்களும் ஒரே ஊதியம் பெறுவார்கள்.


