News May 17, 2024
நாகை: மூன்று நாட்களுக்கு சூறைக்காற்று

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (மே.17- 20) பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 16, 2026
நாகை மாவட்டம்: எந்த பதவியில் யார் ?

1. நாகை மாவட்ட ஆட்சியர் – ப.ஆகாஷ்
2. நாகை மாவட்ட எஸ்.பி – சு.செல்வகுமார்
3. நாகை மாவட்ட வருவாய் அலுவலர் – வ.பவணந்தி
4. நாகை எம்.பி – வை. செல்வராஜ்
5. நாகை எம்எல்ஏ – முகமது ஷானவாஸ்
6. கீழ்வேளூர் எம்எல்ஏ – நாகை மாலி
7. வேதாரண்யம் எம்எல்ஏ – ஓ.எஸ்.மணியன்
8. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 16, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறிய திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது அளிக்கப்பட உள்ளது. இந்த விருதுனை பெற விண்ணப்ப படிவங்களை awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய சான்றுகளுடன் வருகிற பிப்.18ஆம் தேதிக்குள் நாகை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
நாகை மாவட்டத்தில் புகைப்பட போட்டி

பொங்கல் சார்ந்த புகைப்பட போட்டிக்கு அனைவரும் கலந்து கொள்ளலாம். பொங்கலின் பாரம்பரியம், கிராமத்து வாழ்க்கை, உழைப்பு, மகிழ்ச்சி இவற்றை மொபைல் அல்லது DSLR மிரர் லெஸில் புகைப்படமாக எடுக்க வேண்டும். அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜன.19 ஆகும். தேர்வு செய்யப்படும் புகைப்படங்கள் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் புகைப்படக் கலைஞரின் பெயருடன் வெளியிடப்படும் என நாகை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


