News May 17, 2024
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில் தொழிற்சாலை, உந்துசக்தி பூங்கா அமைப்பதற்காக இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
Similar News
News October 21, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் ₹8,000 விலை குறைந்தது

தங்கம் விலையைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று பெரியளவில் சரிவை சந்தித்துள்ளது. காலையில் கிலோவுக்கு ₹2,000 குறைந்த வெள்ளி விலை, மாலையில் மேலும் ₹6,000 குறைந்தது. இதையடுத்து, 1 கிராம் ₹182-க்கும், 1 கிலோ ₹1.82 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வெள்ளி கிலோவுக்கு ₹25,000 குறைந்திருப்பது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
News October 21, 2025
த்ரிஷாவின் தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகையை தனது மனதுக்கு நெருக்கமானவர்களுடன் த்ரிஷா கொண்டாடி மகிழ்ந்துள்ளார். விதவிதமாக ஆடை அணிந்து தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளார். போட்டோக்களை SWIPE செய்து பார்க்கவும்..
News October 21, 2025
நெல் கொள்முதல்.. CM முக்கிய ஆலோசனை

நெல் கொள்முதல் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17%ல் இருந்து 22% ஆக தளர்த்துவதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழை எதிரொலியாக டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை துரிதப்படுத்தவும், நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு விரைந்து கொண்டு செல்லவும் CM அறிவுறுத்தியுள்ளார்.