News May 16, 2024

புஷ்பா-2 படத்தில் இருந்து விலகிய பிரபலம்?

image

இந்திய சினிமா உலகின் முன்னணி படத் தொகுப்பாளராக இருப்பவர் ஆண்டனி ரூபன். அல்லு அர்ஜுன் – சுகுமார் கூட்டணியில் உருவாகிவரும் ‘புஷ்பா-2’ படத்திலிருந்து எடிட்டர் ஆண்டனி ரூபன் விலகியுள்ளார். ஏற்கெனவே ஒத்துக்கொண்ட படங்களில் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தால், அவர் இப்படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. தெறி, வேதாளம், ரெமோ, அண்ணாத்த, ஜவான் போன்ற படங்களில் அவர் பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 24, 2025

தேர்தல் ஆதரவு.. அதிமுகவுக்கு திருமாவளவன் கடிதம்

image

துணை ஜனாதிபதி தேர்தலில் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு கேட்டு ADMK MP-க்களுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்து பாஜகவின் பிடியில் தற்போது வீட்டு சிறையில் இருக்கும் ஜெகதீப் தன்கரின் நிலைதான், நாளை தமிழகத்தை சேர்ந்த CP ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்படும் என ஆருடம் தெரிவித்தார். முன்னதாக, NDA-வின் CPR-க்கு TN MP-க்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என EPS வலியுறுத்தியிருந்தார்.

News August 24, 2025

நாளை மறுநாள் கடைசி.. சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

image

SBI வங்கிகளில் 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசிநாள். TN-ல் 380 பணியிடங்கள் உள்ளன. மாதம் ₹24,050 – ₹64,480 வரை சம்பளம் கொண்ட இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி போதுமானது. ஆன்லைனில் முதல்நிலை, முதன்மை தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் தேர்வு எழுதலாம். மேலும் விவரங்களுக்கு <>www.sbi.co.in <<>>இணையதளத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

News August 24, 2025

நாளை மிக கவனம்

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை(ஆக.25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஆக. 30-ம் தேதி வரை மழை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையிலும் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நாளை வேலை, கல்வி நிலையங்களுக்கு செல்பவர்கள் கவனமுடன் இருங்கள் நண்பர்களே..!

error: Content is protected !!