News May 16, 2024
முதல் 5 இடங்களில் இந்திய வீரர்கள்

RRக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய PBKS வீரர் ஹர்ஷல் படேல் (22) அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். இந்தப் பட்டியலில் ஹர்ஷல் படேல், பும்ரா, வருண் சக்ரவர்த்தி, சாஹல், கலீல் அஹமது என முதல் 5 இடங்களில் இந்திய வீரர்களே உள்ளனர். இதில் MI, PBKS எலிமினேட் ஆகியுள்ளதால் ஹர்ஷல், பும்ரா இருவரும் இந்தப் பட்டியலில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.
Similar News
News September 19, 2025
நேதாஜி பொன்மொழிகள்

*சரித்திரம் வலிமையனாது. இதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் எளிதானவை அல்ல. *தன்னை மாற்றுவதற்கு தயாராக இருப்பவனே உலகத்தை மாற்றுவதற்கு தகுதியனாவன். * உண்மையான நண்பனாக இரு, இல்லாவிட்டால் உண்மையான பகைவனாக இரு. துரோகியாகவோ அரை நம்பிக்கை உடையவனாக இருக்காதே. * ஒருவொருக்கு ஒருவர் விட்டு கொடுக்காது போனால் அரை நிமிடங்கள் கூட இவ்வுலகத்தில் நாம் வாழ்வை நடத்த முடியாது.
News September 19, 2025
என்ன பண்றது எனக்கே கஷ்டமா தான் இருக்கு!

ஹிமாச்சலில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளை பார்வையிட பாஜக MP கங்கனா ரனாவத் சென்றார். அவரை சூழ்ந்த பொதுமக்கள், வெள்ளத்தால் தங்களது உடமைகளை இழந்தது குறித்து வேதனையுடன் தெரிவித்தனர். அப்போது, என்ன செய்ய, மணலியில் உள்ள எனது ஹோட்டலில் நேற்று ₹50-க்கு தான் வியாபாரம் நடந்தது, ஆனால் ஊழியர்களுக்கு ₹15 லட்சம் சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற தன்னுடைய கஷ்டங்களை புலம்ப ஆரம்பித்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
News September 19, 2025
இந்தியா, சீனாவிடம் டிரம்பின் பாட்சா பலிக்காது: ரஷ்யா

சீனா, இந்தியாவை மிரட்டி பணிய வைக்கலாம் என டிரம்ப் நினைத்தால், அது நடக்காது என ரஷ்ய அமைச்சர் செர்ஜி லவ்ரோ தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் பழங்காலம் முதலே சிறந்து விளங்கிய நாகரீகங்கள் எனவும், அவர்களிடம் போய் இதை செய், அதை செய், இல்லையென்றால் வரிவிதிப்பேன் என்று சொல்வது நகைப்புக்குரியதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். டிரம்ப் வரிவிதிப்புகளால் மிரட்டி வரும் நிலையில் அவர் இவ்வாறு சாடியுள்ளார்.