News May 15, 2024

இந்த தொகுதிகளில் பாஜக போட்டியிடவில்லை

image

400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கும் பாஜக, 3 தொகுதிகளில் போட்டியிடவில்லை. ஜம்மு – காஷ்மீருக்கு 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் இப்போதுதான் முதல் முறையாக தேர்தல் நடைபெறுகிறது. அதில், உதம்பூர், லடாக் பகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கும் பாஜக, காஷ்மீரின் 3 தொகுதிகளில் மட்டும் போட்டியிடவில்லை. இஸ்லாமியர்களின் எதிர்ப்பே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

Similar News

News August 15, 2025

மகளிர் உரிமைத்தொகை 24-வது தவணை வந்தது

image

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை(KMUT) திட்டத்தின் 24-வது தவணை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. கடந்த மாதம் 15-ம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவை பரிசீலனை நிலையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

News August 15, 2025

எதிரிகளை மிரள வைக்கும் ‘சுதர்ஷன் சக்ரா மிஷன்’

image

மோடி அறிவித்த <<17410827>>‘சுதர்ஷன் சக்ரா மிஷன்<<>>’ நாட்டின் பாதுகாப்பை பல மடங்கு அதிகரிக்குமாம். இந்தியாவின் தேவைக்கேற்ற பாதுகாப்பு, நவீன கண்காணிப்பு, துல்லியமான தற்காப்பு உள்ளிட்டவை இதில் திட்டத்தில் உள்ளாக்கப்படுமாம். இஸ்ரேலின் அயர்ன் டோமை விட அதிநவீன அம்சங்களை உள்ளடங்கி உள்நாட்டிலேயே இத்திட்டம் முழுமையாக வடிவமைக்கப்பட உள்ளது. எதிரிகள் இந்தியாவை நெருங்க கனவில் கூட எண்ணக்கூடாது, என்பதே இதன் நோக்கமாம்.

News August 15, 2025

மோடியின் அறிவிப்புக்கு திருமா வரவேற்பு

image

மோடி சுதந்திரதின உரையில், GST வரி குறைப்பு பற்றி அறிவித்திருப்பது, மகிழ்ச்சி தருவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக செய்தாலும், மக்களுக்கு பயன்பெறும் என்பதால் ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம் எனவும் கூறியுள்ளார். தங்களின் எண்ணம் GST-ஐ முழுமையாக கைவிடப்பட வேண்டும் என்பதே விருப்பம் என தெரிவித்த அவர், சுதந்திர தின விழாவில் RSS-ஐ PM பாராட்டியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!