News May 14, 2024
ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ஃபில் சால்ட்

கொல்கத்தா வீரர் ஃபில் சால்ட், ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். உலகக் கோப்பைக்கான பயிற்சியைத் தொடங்குவதற்காக வீரர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டுமென, இங்கி., கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. அதனால், நேற்று ஜாஸ் பட்லர், வில் ஜாக்ஸ், ரீஸ் டோப்லி ஆகியோர் நாடு திரும்பிய நிலையில், இன்று ஃபில் சால்ட்டும் நாடு திரும்பினார். இதனால், கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
அதிமுகவை MGR தொடங்கவில்லையா..!

1972-ல் புதிதாக கட்சி தொடங்க நினைத்த MGR, அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் பதிவு செய்திருந்த அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்டார். சாதாரண ஒரு தொண்டனாகவே தன்னை இக்கட்சியில் இணைத்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார். அதிமுக என்ற பெயரில் செயல்பட்டு வந்ததை, 1976-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றினார். தற்போது MGR-ஐ பின்பற்றி தொண்டர் ஒருவரின் கட்சியில் <<19370263>>சசிகலா<<>> இணைந்துள்ளார்.
News March 13, 2026
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 20 பைசா சரிந்துள்ளது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு ₹92.45 என்ற நிலைக்கு ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம். அதேபோல், இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியதும் சரிவை அதிகரித்துள்ளது.
News March 13, 2026
பெண் மீது சிறுநீர் கழித்தவர் மரணம்.. அதிர்ச்சி

சென்னையில் கலைச்செல்வன் தனது நண்பருடன் ஆட்டோவில் பயணித்துள்ளனர். குடிபோதையிலிருந்த கலைச்செல்வன், ஆட்டோவில் இருந்தவாறே வெளியில் சிறுநீர் கழித்துள்ளார். இது அங்கு நடந்து சென்ற பெண் மீது பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுற்றி இருந்தவர்கள் தாக்கியதில், கலைச்செல்வன் உயிரிழந்தார். எனவே, அவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


