News May 14, 2024
சபரிமலையில் இன்று நடை திறப்பு

வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது. நாளை காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும். 19ஆம் தேதி சபரிமலை கோயில் பிரதிஷ்டை தினம் என்பதால், நாளை முதல் 19ஆம் தேதி வரை காலையில் நெய் அபிஷேகமும் நடைபெறும். 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.
Similar News
News March 19, 2026
சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற கடைசி சுயேச்சை!

2017-ல் RK நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட TTV தினகரன், அதிமுகவின் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதற்கு முன்னர், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தளி தொகுதியில் போட்டியிட்ட T ராமச்சந்திரன், CPI வேட்பாளர் நாகராஜ ரெட்டியை 4,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வெற்றிக்கு பிறகு CPI-ல் இணைந்த அவர், அதே தொகுதியில் 2011, 2021 தேர்தல்களிலும் வென்று MLA ஆனார்.

News March 18, 2026
விலை ₹45,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

கார்களுக்கான மார்ச் மாத சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டாடா, ஸ்கோடா, ஹோண்டா, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ளன. குறைந்தபட்சம் ₹45,000 முதல் அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை சலுகைகள் உள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.