News May 14, 2024

கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும்

image

எதிர்காலத்தில் பெங்களூர் அணிக்கு கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த முறை பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றால், இந்திய வீரர் ஒருவரை அந்த அணிக்கு கேப்டனாக்க வேண்டும் என்ற அவர், அது கோலியாக இருந்தால் அணிக்கு நல்லது என்றார். சென்னை அணியில் தோனி தாக்கத்தை ஏற்படுத்துவதை போல, கோலி பெங்களூர் அணியில் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனவும் கூறினார்.

Similar News

News March 19, 2026

விழுப்புரத்தில் சம்பளப் பிரச்னையா?

image

விழுப்புரம் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <>லிங்கிலோ<<>> (அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்

News March 19, 2026

காலம் வேறு… காட்சி வேறு!

image

இன்று டெல்லி சென்றுள்ள EPS, தன்னை சந்திக்க அமித்ஷா இன்னும் <<19425630>>நேரம் ஒதுக்கவில்லை<<>> என்றார். காலச்சக்கரத்தில் 1998-ஐ ரீவைண்ட் செய்யுங்கள். ஜெயலலிதாவின் ஆதரவு கடிதத்துக்காக வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பல மணிநேரம் காத்துக் கிடந்தனர். இதனால் பதவியேற்பும் தாமதமானது. வாஜ்பாய் தூதராக அதிமுகவின் ஆதரவை கேட்டு போயஸ் கார்டன் வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸை நீண்டநேரம் காக்கவைத்தே சந்தித்தார் ஜெயலலிதா. வரலாறு!

News March 19, 2026

BREAKING: ரம்ஜான் விடுமுறை.. அறிவித்தது தமிழக அரசு

image

தமிழகம், புதுச்சேரியில் வரும் 21-ம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என இரு மாநில அரசுகளின் தலைமை காஜிகளும் அறிவித்துள்ளனர். வழக்கம் போல், இன்று மாலை பிறை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், இன்று பிறை தென்படாததால் வரும் சனிக்கிழமை ரம்ஜான் கொண்டாடப்படும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!