News May 14, 2024

பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி காலமானார்

image

பீகார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி(72) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 1 மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த 2005 முதல் 2013 வரை மற்றும் 2017 முதல் 2020 வரை பீகார் துணை முதல்வராகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகித்தார். இதுதவிர எம்.எல்.ஏ., எம்.எல்.சி., எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.

Similar News

News March 25, 2026

KN நேரு மீது ஏன் FIR பதியவில்லை? சென்னை HC

image

ஐகோர்ட் உத்தரவிட்டும் KN நேரு மீது FIR பதியவில்லை என அதிமுக MP இன்பதுரை DVAC மீது கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த சென்னை HC, KN நேரு மீது உடனடியாக FIR பதியுமாறு கூறியும் ஏன் பதியவில்லை, உத்தரவையே ஏன் சிதைக்க பார்க்கிறீர்கள் என DVAC-க்கு கேள்வி எழுப்பியது. அப்போது உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக TN அரசு தரப்பில் கூற, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

News March 25, 2026

விடுமுறை.. ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு

image

வார இறுதி & மகாவீர் ஜெயந்தி (மார்ச் 31) விடுமுறையை முன்னிட்டு, வெளியூரில் இருப்போர் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருப்பீர்கள். நீங்கள் சிரமமின்றி சொந்த ஊர் செல்ல ஏதுவாக 915 சிறப்பு பஸ்களை அரசு ஏற்பாடு செய்துள்ளது. எனவே, சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருப்போர் இங்கே <>கிளிக் <<>>செய்து டிக்கெட் புக் செய்யுங்கள். உங்கள் உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 25, 2026

சென்னையில் IPL போட்டி நடக்காதா?

image

TN-ல் ஏப்.23 தேர்தல் நடக்கவுள்ளதால் சென்னையில் நடக்கவுள்ள 2 IPL போட்டிகளை ஒத்திவைக்குமாறு பிரபாகரன் என்பவர் HC-ல் வழக்கு தொடர்ந்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் போலீஸுக்கு இது கூடுதல் சுமை எனவும் தேவையில்லாத சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படலாம் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், ஏப்.3-ல் CSK vs PBKS & ஏப்.11-ல் CSK vs DC போட்டிகளை ஒத்திவைக்கும் நிலை ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!