News May 13, 2024
உலகின் சுவையான சிக்கன் உணவுகள்

உலகின் சுவையான சிக்கன் உணவுகளின் பட்டியலை tasteatlas வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கொரியன் fried சிக்கன் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் உணவுகள் 3 இடங்களை பிடித்துள்ளன. அதன்படி, பட்டர் சிக்கன் 2ஆவது இடத்தையும், சிக்கன் டிக்கா 3ஆவது இடத்தையும், சிக்கன் 65 9ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. பெருவின் ரோஸ்ட் சிக்கன் 4ஆவது இடத்தையும், மலேசியாவின் அயம் கோரெங் 5ஆவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
Similar News
News September 15, 2025
பெரம்பலூர்: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் விழா வருகின்ற 20-09-2025 அன்று துரைமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. மேலும் விவரத்திற்கு 04328-296352 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.
News September 15, 2025
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகர்

சிரஞ்சீவி, கமலுடன் தவெக தலைவர் விஜய்யை ஒப்பிட்டு விமர்சனம் செய்வது நல்லது அல்ல என்று அவருக்கு ஆதரவாக இயக்குநரும், நடிகருமான சுப்பிரமணிய சிவா களமிறங்கியுள்ளார். பல ஊர்கள் சென்று வருவதன் அடிப்படையில் அழுத்தமாக சொல்கிறேன்; விஜய்யை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். வரலாற்றின் வேலை துணிந்தவனை தலைவனாக்குவது தான் எனக் கூறிய அவர், விஜய் வரவு அரசியலில் ஒரு அதிர்வு என்பதே உண்மை என்று தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
இந்தியர் கொலைக்கு பைடன்தான் காரணம்: டிரம்ப்

USA-ல் இந்தியரான சந்திரமௌலி நாகமல்லையா கொலை செய்யப்பட்டதற்கு ஜோ பைடனின் கையாளாகாத ஆட்சிதான் காரணம் என டிரம்ப் சாடியுள்ளார். பைடன் ஆட்சியில் கியூபாவிலிருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்தான் இக்கொலையை செய்ததாகவும், தன்னுடைய ஆட்சியில் USA மீண்டும் பாதுகாப்பானதாக மாறும் எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், கைதான நபருக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.